குளவிகள்

மே 7, 2006

அநாமிகா அறிமுகப் படலம்

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 9:47 பிப

என்னோட பேர் அநாமிகா. அநாமிகான்னா என்ன அர்த்தம்னு தெரியுமா? பெயர் இல்லாதவள்னு அர்த்தமாம்.

For example, the name Anamika (literally ‘without a name’) means that the child’s future is what she wants to make it, since she is not hedged in by any preordained limitations. [பெயர்கள்].

என்ன நினைச்சு எனக்குப் பேரு வைச்சாங்களோ தெரியல. ஆனா, இந்தப் பேரு எனக்கு ரொம்பவே பிடிக்கும். சொந்தப் பேரு பிடிக்கலைன்னு யாராவது சொல்லுவாங்களான்னு நீங்க கேக்கலாம். இருக்காங்களே! அவங்களையெல்லாம் பார்த்தாக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம். இப்படி, என்னோட பேரு அழகான பேருன்னு கர்வமா இருக்கிறப்பதான் அனாமிகான்னா முகவரி இல்லாதவள்னு அர்த்தம். இதுவரைக்கும் எப்படியோ, இனிமே நீ நாடோடிதான்னு ஒரு பிரெண்டு சொன்னான். படுபாவிப் பய. அதைக் கேட்டதிலருந்து மனதோரத்தில் ஒரு சின்ன வலி. அப்படி ஆயிருமோன்னு ஒரு பயம். ஆனாப் பாருங்க, இப்ப நாம எல்லாருமே ஏதோவொரு வி்ஷயத்தில நாடோடியாத்தான் இருக்கோம். இல்ல?

மனதோரத்தில் வலின்னதும் ஒரு விஷயம் பேசணும்போலருக்கு. லவ் பண்ற மாதிரி மனசுக்கு வலியும் சந்தோ்ஷமும் குடுக்கிற வி்ஷயம் இருக்கா சொல்லுங்க. லவ்னா அது மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல, அதையும் தாண்டிப் புனிதமானது… லெவல்க் காதல்ல இருந்து இப்பதான் மொட்டுவிட்டு அரும்புற காதல்ல இருந்து, அந்த மொட்டே சின்ன cellஆ உருவாகுற உணர்வுவரைக்கும். இது எல்லாத்தையுமே லவ்னு சொல்லிருவோம். சரியா?

சரி, விஷயத்துக்கு வருவோம். லவ் மாதிரி சந்தோஷமான விஷயம் இல்லைங்கிறது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த அளவுக்கு டாச்சர் குடுக்கிற விஷயமும் இல்லைங்கிறதுதான். சில நேரங்களில் பிடிக்காத விஷயங்கள் சில நேரம் ரொம்ப பிடிச்சுப் போயிரும். சில நேரங்களில் பிடிக்கவே பிடிக்காத விஷயங்களையெல்லாம் நோண்டித் துளாவித் தேடிக்கிட்டுத் திரிவோம். ஏதோ உலகமே, நம்மளுக்காக மட்டுந்தான் சுத்துதுன்னும் நினைச்சுக்கிட்டுத் திரிவோம். யாராரோ ஏதெதுக்கோ துட்டு வாங்கிட்டு மெட்டுக்குப் போட்ட/போடாத பாட்டுகளையெல்லாம் ஏதோ நமக்காக மட்டுமே உருவாக்கினாங்கன்னு ஃபீல் பண்ணிக்கிட்டுத் திரிவோம். இல்லிங்களா?

சரி, இன்னிக்கு அறுவை ரொம்ப நீளமாப் போச்சு.

ஒரு பாட்டோட முடிக்கிறேன்.

‘அநாமிகா’ படத்தில வர்ர பாட்டுங்க. எல்லாம் ஒரு சுயமோகந்தானுங்க. 😉

http://www.raaga.com/getclip.asp?id=999999003131

5 பின்னூட்டங்கள் »

 1. //’அநாமிகா’ படத்தில வர்ர பாட்டுங்க. எல்லாம் ஒரு சுயமோகந்தானுங்க. ;)//
  சொயமோகம்
  யாருக்குந்தான் இல்லைங்க!:-(

  பின்னூட்டம் by வியர்க் குளவி — மே 8, 2006 @ 12:12 முப

 2. நல்வரவு.

  பின்னூட்டம் by துளசி கோபால் — மே 8, 2006 @ 12:23 முப

 3. வாங்க!! வாங்க!!

  பின்னூட்டம் by Sivabalan — மே 8, 2006 @ 1:53 முப

 4. வாங்க!! வாங்க!!

  நல்வரவு.

  பின்னூட்டம் by குமரன் (Kumaran) — மே 8, 2006 @ 2:27 முப

 5. வரவேற்புக்கு நன்றிங்க.

  வியர்க்குளவி: ஹிஹி

  பின்னூட்டம் by அநாமிகா — மே 8, 2006 @ 3:50 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: