குளவிகள்

மே 6, 2006

அறிமுகம்/introடக்சன்

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 4:17 பிப

நானு ஒரு சாதாரண பொம்பளைங்க. எல்லாரும்போல கொஞ்சம் லூசுங்க… அப்படிச் சொல்லாதிங்க, எல்லாரும் ஒரு வகையில லூசுங்க தானுங்க. சீச்சி, முத்தலைங்க. நீங்க உண்டுபண்ணினாத்தான்…

அப்பப்ப வந்து தலைகாட்டீட்டுப் போவனுங்க, மூடு அவுட்டு ஆவற டைம்களில.. நீங்களும் வந்து…
இல்லாட்டியும் பரவாயில்லிங்க, நானே ஏதாச்சும்…

வரட்டுங்களா. என்ற கூட்டாளிங்க அல்லாரும் (அல்லாரும் பொம்பளைங்க இல்லிங்) வக்கே்ஷனில போயிட்டாங்க. இன்னா பண்ண, கையில நயா பைசா இல்லீங்க. அண்ணன்தம்பீங்கன்னு இருந்தாலே பிரச்சனைதாங்க, புரு்ஷன் பொண்டாட்டின்னா சொல்லணுமா? என்னா என் லாஜிக்கு!! வலைப்பதிவுக்கு இம்புட்டு போதுங்க.

சரீங்க உண்மையா வரேங்க. எல்லாரும் டேக்கு கியாரு.

வணக்கமுங்கோ.

அப்பாலிக்கா ஒரு விசயம்.

இடுகைகளுக்குக் கீழ சிட்டுவேசன் ஸாங்கு போடுவேனுங்கோ, என் மூடுகோசரம்.. கண்டுக்காதிங்க.

ஆங்..அதப்பற்றி சின்னக் குறிப்புங்க…
நானா இயற்றி நானே எழுதுவேனுங்கோ, பிறப்பில இருந்து வந்த திறமையுங்கோ, கண்ணு வைக்காதிங்கோ(ஓ……………….. ), பிடிச்சா பாடிக்குங்கோ. சுட்டுராதீங்கோ¡, காப்பி/டீ ரைட்ஸ் எல்லாம் என்னதுங்கோ.

இப்பிடித்தானுங்கோ. சும்மா சொல்லக்கூடாது. ஆனா எனக்கு நிறைய திறமையுங்கோ!

பாட மாட்டேன்
ஆட மாட்டேன்
ஆனால எழுதினேன்னா கவிதையா கொட்டுமுங்கோ. எல்லாம் சொந்தச் சரக்கு. எரிச்சல்ல வேகாதிங்கோ. நம்ம பொண்ணுதானேன்னு ஸ்போர்டிவ்வா எடுத்துக்கிட்டு ஜாலினோ ஜிம் கானா-ன்னு இருங்கோ.

சரீங்களா? கோபமில்லியே? மனஸ்தாபம்??? நமக்க்க்க்க்குள்ள என்னங்க? இல்ல???

நான் அடிக்கடி சொல்லுறதுண்டு, வாழ்க்¨யே ஒரு நாடக மேடை.

புரியுதுங்களா? ஆமா ஒரே ஸ்டெடியில நிக்கோணுமுங்கோ.

சரீங்களா?

இத மாச்சு மாதம் ஆரம்பிச்சேங்க.. ஆனா இப்பத்தான் பதினாலு மாசங்கழிச்சு மே-ல முடியுது.

தரமா வரணுங்கோ, அதான் முக்கியம். அந்த முயச்சியில பிறந்ததுங்க இந்த ‘அறிமுகம்.’

அப்பறம் .. முக்கிய மாட்டர கேக்க மறந்திட்டனே..

நானு எப்பிடிங்க இருக்கேன்? குட்டிப் பையன் கார்த்திக்கு ரேஞ்சுக்கு இல்லாட்டிலும் ரொம்ப புஷ்டியா இருப்பேனுங்க.. பிராப்புளமுங்கோ.

ச்சிஸ்டர்ஸ்! நான் ஒல்லியாகணுங்கோ… எனக்கு தனிமடலில டயட் பண்ண டிப்ஸு அனுப்புங்கோ..

அனுப்பூவீகளா?

நம்மெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணில்லியா?!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சொந்தக் கருத்துப் பாடல்:
சிந்திச்சா சிரிப்பு வரும்

சிலவேளை அழுகை வரும்

16 பின்னூட்டங்கள் »

  1. நானு தானுங்க!
    ச்சும்மா செக்கிங்!

    பின்னூட்டம் by வியர்க் குளவி — மார்ச் 4, 2005 @ 6:24 முப

  2. //நானு ஒரு சாதாரண பொம்பளைங்க. எல்லாரும்போல கொஞ்சம் லூசுங்க… //

    வாரவங்க எல்லாருமே ஒரு மார்க்கமாவே இருக்காங்களே 🙂

    பின்னூட்டம் by ramachandranusha — மே 6, 2006 @ 5:23 முப

  3. எங்களுக்கு விசரக் கிழப்பாம இருந்தாச் சரி.
    (முந்தி உதே பேரில பின்னூட்டங்களில வந்து அலம்பினது நீங்கள் தானோ?)

    பின்னூட்டம் by கொழுவி — மே 6, 2006 @ 6:00 முப

  4. நன்றீ நன்றீ
    //பின்னூட்டங்களில வந்து அலம்பினது//
    இதென்னங்க வம்பா போச்சு, இருந்திருந்து முட்டுக்கோசரம் நாங்க துணி அலம்புறதுண்டுங்க

    பின்னூட்டம் by வியர்க் குளவி — மே 6, 2006 @ 6:37 முப

  5. வியர்க் குளவி,

    அம்மிணி கலக்கோ கலக்குன்னு கலக்குறீங்கோ. இப்ப உங்களுக்கு என்ன வேணும்?உடம்பு மெலிய டயட் டிப்ஸ்தானே?

    இந்த நாய் வாலை நேராக்குறதுக்கு வழி சொல்லிங்கன்னா நானு உங்களுக்கு டிப்ஸு கொடுப்பேனுங்க. எப்படி வசதி?

    பின்னூட்டம் by குசும்புக் குளவி — மே 6, 2006 @ 7:19 முப

  6. என்ன ஒரு படையே வராப்ல கீது….

    ஆமா..அதென்னங்க ஒங்க கும்பலெல்லாமே வித்தியா மான பேர வெச்சிக்கினுகீரிங்க? ஏதாச்சும் வேண்டுதலா?

    பாத்து கண்ணு பொல்லாத ஊரு!

    பின்னூட்டம் by நாகு — மே 6, 2006 @ 2:59 பிப

  7. Welcome!!

    பின்னூட்டம் by Sivabalan — மே 6, 2006 @ 3:08 பிப

  8. wasp woma(e)n !
    welcome !

    பின்னூட்டம் by கார்திக்வேலு — மே 6, 2006 @ 3:29 பிப

  9. //
    welcome !//

    வந்துண்டோம்ல!
    இனி ஒவ்வோர்த்தர வந்துருவோம்ல!!!!

    பின்னூட்டம் by வியர்க் குளவி — மே 8, 2006 @ 7:47 பிப

  10. ஏம்மா குசும்புக் குளவி,
    நாய்க்கு நேர் வாலு அழகே அழகில்லைங்க.. என்னாம்ம நீங்க

    பின்னூட்டம் by வியர்க் குளவி — மே 8, 2006 @ 7:49 பிப

  11. ஆத்தா …சுட்டிப்பையன் சின்னப்பையன்..ஓவரா கொட்டுனா தாங்கமட்டான்..பாத்து செய்யுங்க.. 🙂

    பின்னூட்டம் by KARTHIKRAMAS — மே 8, 2006 @ 8:30 பிப

  12. சரீ டா கார்த்திக்குப்பையா

    பின்னூட்டம் by வியர்க் குளவி — மே 14, 2006 @ 9:07 பிப

  13. வியர்க் குழவியா? வியர்க் கிழவியா?
    யோகன்
    பாரிஸ்

    பின்னூட்டம் by paarvai — மே 18, 2006 @ 2:24 பிப

  14. விசர் தானே வியர் ஆனது?
    குழவி என்பது kulavi என்று எழுதப்பட்டுள்ளது. kuzhavi என்று எழுதப்படவில்லை.
    இவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.;-)

    பின்னூட்டம் by வசந்தன்(Vasanthan) — மே 18, 2006 @ 3:43 பிப

  15. கொடுமை…ம்ம்ம்…எப்பவுமே இப்படித்தானா அல்லது இப்பமட்டும் அப்படியா அல்லது அப்படியே இப்போவா அல்லது எப்படியே அப்படித்தானா ?

    பின்னூட்டம் by செந்தழல் ரவி — ஜூன் 26, 2006 @ 7:11 முப

  16. யோகன்: இஞ்ச..

    வசந்தன்: வசந்தா…….

    செசே.ரவி!: /எப்பவுமே இப்படித்தானா அல்லது இப்பமட்டும் அப்படியா அல்லது அப்படியே இப்போவா அல்லது எப்படியே அப்படித்தானா ?/
    –யாருக்குத் தெரியும்பா?
    நீ தான் ஒரே மார்க்கமா இருக்க, “ஆறு” விளையாட்டில சொன்னியா சத்தியராசு பிடிக்கும்னு,
    உனக்கு மட்டும் சும்மா குசும்பா, ஊமைக் குசும்புல்ல

    அறுத்துக்கிற அவனவன் பிளாக்குகள்ல போயி ‘செந்தழல்’-னு பேரு வச்சாலுந்தான் வச்சே, எண்ணெய ஊத்தியெல்லே விடுறப்பூ,
    சும்மா என்னைய சொல்றியே, அடுக்குமா?

    usha: என்னங்க பெரிய மார்க்கம். வாத்தைங்கள மாத்திப் மாத்திப் போட்டு.. என்ன பொழைப்போன்னு “சீ”-ன்னு போச்சு.
    காா (பெருமூச்சுங்க, பயந்திராங்திங்கோவ்வ்!)
    ஒருமாதிரி உங்க எல்லாருக்கும் பதில் சொல்லீட்டேன். அப்பா(ஆஆஆஆஆஆஆ)டா!

    பின்னூட்டம் by வியர்க் குளவி — ஜூன் 30, 2006 @ 8:43 முப


RSS feed for comments on this post. TrackBack URI

பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.