குளவிகள்

மே 22, 2006

மணக்கங்க! oops வணக்கங்க.

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 5:36 முப

வணக்கங்க. நா வாயத்தொறந்தா கெட்ட கெட்ட வார்த்தையா வருதுங்க. கண்டுக்காதீங்க.

என் வொக்காபிலரில உங்களுக்குத் தெரியவேண்டியது மூணே மூணு வார்த்தைங்க.

முதல்ல கக்கூசுங்க.

அதுல பாருங்க. கக்கூஸ்!!!

அப்படின்னா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு அர்த்தங்க.

அப்புறங்க. கொட்டைங்க.

அதுலயும் கொட்டை!!! அப்டீன்னா மூட் அவுட்ல இல்லேன்னா கோபத்தில இருக்கேங்க. ரொம்ப கோபத்தில இருக்கேங்க.

அப்புறம் எனக்கு ரொம்ம்ம்ம்ப்ப பிடிச்ச வேர்டுங்க. குசுங்க.

அது இன்னான்னா. நான் நடுநிலைல இருக்கேங்க.

—-

நான் என்னோட ஆட்டத்தை என் பிரெண்டோட பாட்டோட தொடங்கிறேங்க.

கொட்டை வளர்த்தேன் கொட்டை வளர்த்தேன்

ஏ பிள்ள பிள்ள பிள்ள என்ன வளர்த்த

கொட்டை வளர்த்தேன்
உள்ளே உள்ளே பாண்ட்ஸ¤க்குள்ளே கொட்டை வளர்த்தேன்

அம்புட்டுத்தாங்க. அப்புறம் வர்ரேங்க. உங்களுக்கும் பாட்டு வந்தா ·பீல் ·பீரீஈஈஈங்க.

எப்பயும் காமெண்ட அக்ஸெப்ட் பண்ணிடுவேங்க.

இது ஆபாசம்னு நினைச்சிராதீங்க. என்னோட மனசுல பட்டதுங்க.

என்ர கக்கூஸ்!!! (aka) கக்கூஸ் குளவி

அழகா இருக்காங்க… செம செம அழகா இருக்காங்க….

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 3:05 முப

russel.jpg

justin0.jpg

*உன்னைப் பார்த்த பின்பு நான் வேறு யாரைப் பார்ப்பது?

keanu.jpg

…தொடர்றும்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சொ.க. பாடல்:

அழகா இருக்காங்க… ஓ அழகா இருக்காங்க,
என்கண்ணே பட்டிரும் போல எல்லாம் செம அழகா இருக்காங்க…


*ச்சும்மா பாட்டுங்க. இத்தெல்லாம் பொலோப் பண்ண முடியாத்து. உலகம் ரொம்பப் பெரிசுங்க. நிறையப் பேர் இருக்காங்க. யாரும் தனிச்சுப் போயிரக் கூடாதில்லிங்களா…

மே 21, 2006

சைட்டு – may-20-2006

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 6:19 முப

அநியாயமா செத்துப்போய்ட்டியே!River Phoenix (1970 – 1993)

மே 8, 2006

சைட்டு – மே8

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 6:55 பிப

பச்சையா நீலமா – உன் கண்கள்? ஆயிரம் கவி பாட வைக்குதே!

Ewan McGregor

மே 7, 2006

அநாமிகா அறிமுகப் படலம்

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 9:47 பிப

என்னோட பேர் அநாமிகா. அநாமிகான்னா என்ன அர்த்தம்னு தெரியுமா? பெயர் இல்லாதவள்னு அர்த்தமாம்.

For example, the name Anamika (literally ‘without a name’) means that the child’s future is what she wants to make it, since she is not hedged in by any preordained limitations. [பெயர்கள்].

என்ன நினைச்சு எனக்குப் பேரு வைச்சாங்களோ தெரியல. ஆனா, இந்தப் பேரு எனக்கு ரொம்பவே பிடிக்கும். சொந்தப் பேரு பிடிக்கலைன்னு யாராவது சொல்லுவாங்களான்னு நீங்க கேக்கலாம். இருக்காங்களே! அவங்களையெல்லாம் பார்த்தாக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம். இப்படி, என்னோட பேரு அழகான பேருன்னு கர்வமா இருக்கிறப்பதான் அனாமிகான்னா முகவரி இல்லாதவள்னு அர்த்தம். இதுவரைக்கும் எப்படியோ, இனிமே நீ நாடோடிதான்னு ஒரு பிரெண்டு சொன்னான். படுபாவிப் பய. அதைக் கேட்டதிலருந்து மனதோரத்தில் ஒரு சின்ன வலி. அப்படி ஆயிருமோன்னு ஒரு பயம். ஆனாப் பாருங்க, இப்ப நாம எல்லாருமே ஏதோவொரு வி்ஷயத்தில நாடோடியாத்தான் இருக்கோம். இல்ல?

மனதோரத்தில் வலின்னதும் ஒரு விஷயம் பேசணும்போலருக்கு. லவ் பண்ற மாதிரி மனசுக்கு வலியும் சந்தோ்ஷமும் குடுக்கிற வி்ஷயம் இருக்கா சொல்லுங்க. லவ்னா அது மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல, அதையும் தாண்டிப் புனிதமானது… லெவல்க் காதல்ல இருந்து இப்பதான் மொட்டுவிட்டு அரும்புற காதல்ல இருந்து, அந்த மொட்டே சின்ன cellஆ உருவாகுற உணர்வுவரைக்கும். இது எல்லாத்தையுமே லவ்னு சொல்லிருவோம். சரியா?

சரி, விஷயத்துக்கு வருவோம். லவ் மாதிரி சந்தோஷமான விஷயம் இல்லைங்கிறது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த அளவுக்கு டாச்சர் குடுக்கிற விஷயமும் இல்லைங்கிறதுதான். சில நேரங்களில் பிடிக்காத விஷயங்கள் சில நேரம் ரொம்ப பிடிச்சுப் போயிரும். சில நேரங்களில் பிடிக்கவே பிடிக்காத விஷயங்களையெல்லாம் நோண்டித் துளாவித் தேடிக்கிட்டுத் திரிவோம். ஏதோ உலகமே, நம்மளுக்காக மட்டுந்தான் சுத்துதுன்னும் நினைச்சுக்கிட்டுத் திரிவோம். யாராரோ ஏதெதுக்கோ துட்டு வாங்கிட்டு மெட்டுக்குப் போட்ட/போடாத பாட்டுகளையெல்லாம் ஏதோ நமக்காக மட்டுமே உருவாக்கினாங்கன்னு ஃபீல் பண்ணிக்கிட்டுத் திரிவோம். இல்லிங்களா?

சரி, இன்னிக்கு அறுவை ரொம்ப நீளமாப் போச்சு.

ஒரு பாட்டோட முடிக்கிறேன்.

‘அநாமிகா’ படத்தில வர்ர பாட்டுங்க. எல்லாம் ஒரு சுயமோகந்தானுங்க. 😉

http://www.raaga.com/getclip.asp?id=999999003131

மே 6, 2006

அறிமுகம்/introடக்சன்

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 4:17 பிப

நானு ஒரு சாதாரண பொம்பளைங்க. எல்லாரும்போல கொஞ்சம் லூசுங்க… அப்படிச் சொல்லாதிங்க, எல்லாரும் ஒரு வகையில லூசுங்க தானுங்க. சீச்சி, முத்தலைங்க. நீங்க உண்டுபண்ணினாத்தான்…

அப்பப்ப வந்து தலைகாட்டீட்டுப் போவனுங்க, மூடு அவுட்டு ஆவற டைம்களில.. நீங்களும் வந்து…
இல்லாட்டியும் பரவாயில்லிங்க, நானே ஏதாச்சும்…

வரட்டுங்களா. என்ற கூட்டாளிங்க அல்லாரும் (அல்லாரும் பொம்பளைங்க இல்லிங்) வக்கே்ஷனில போயிட்டாங்க. இன்னா பண்ண, கையில நயா பைசா இல்லீங்க. அண்ணன்தம்பீங்கன்னு இருந்தாலே பிரச்சனைதாங்க, புரு்ஷன் பொண்டாட்டின்னா சொல்லணுமா? என்னா என் லாஜிக்கு!! வலைப்பதிவுக்கு இம்புட்டு போதுங்க.

சரீங்க உண்மையா வரேங்க. எல்லாரும் டேக்கு கியாரு.

வணக்கமுங்கோ.

அப்பாலிக்கா ஒரு விசயம்.

இடுகைகளுக்குக் கீழ சிட்டுவேசன் ஸாங்கு போடுவேனுங்கோ, என் மூடுகோசரம்.. கண்டுக்காதிங்க.

ஆங்..அதப்பற்றி சின்னக் குறிப்புங்க…
நானா இயற்றி நானே எழுதுவேனுங்கோ, பிறப்பில இருந்து வந்த திறமையுங்கோ, கண்ணு வைக்காதிங்கோ(ஓ……………….. ), பிடிச்சா பாடிக்குங்கோ. சுட்டுராதீங்கோ¡, காப்பி/டீ ரைட்ஸ் எல்லாம் என்னதுங்கோ.

இப்பிடித்தானுங்கோ. சும்மா சொல்லக்கூடாது. ஆனா எனக்கு நிறைய திறமையுங்கோ!

பாட மாட்டேன்
ஆட மாட்டேன்
ஆனால எழுதினேன்னா கவிதையா கொட்டுமுங்கோ. எல்லாம் சொந்தச் சரக்கு. எரிச்சல்ல வேகாதிங்கோ. நம்ம பொண்ணுதானேன்னு ஸ்போர்டிவ்வா எடுத்துக்கிட்டு ஜாலினோ ஜிம் கானா-ன்னு இருங்கோ.

சரீங்களா? கோபமில்லியே? மனஸ்தாபம்??? நமக்க்க்க்க்குள்ள என்னங்க? இல்ல???

நான் அடிக்கடி சொல்லுறதுண்டு, வாழ்க்¨யே ஒரு நாடக மேடை.

புரியுதுங்களா? ஆமா ஒரே ஸ்டெடியில நிக்கோணுமுங்கோ.

சரீங்களா?

இத மாச்சு மாதம் ஆரம்பிச்சேங்க.. ஆனா இப்பத்தான் பதினாலு மாசங்கழிச்சு மே-ல முடியுது.

தரமா வரணுங்கோ, அதான் முக்கியம். அந்த முயச்சியில பிறந்ததுங்க இந்த ‘அறிமுகம்.’

அப்பறம் .. முக்கிய மாட்டர கேக்க மறந்திட்டனே..

நானு எப்பிடிங்க இருக்கேன்? குட்டிப் பையன் கார்த்திக்கு ரேஞ்சுக்கு இல்லாட்டிலும் ரொம்ப புஷ்டியா இருப்பேனுங்க.. பிராப்புளமுங்கோ.

ச்சிஸ்டர்ஸ்! நான் ஒல்லியாகணுங்கோ… எனக்கு தனிமடலில டயட் பண்ண டிப்ஸு அனுப்புங்கோ..

அனுப்பூவீகளா?

நம்மெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணில்லியா?!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சொந்தக் கருத்துப் பாடல்:
சிந்திச்சா சிரிப்பு வரும்

சிலவேளை அழுகை வரும்

Ye Liu: "நா என்னாத்த சொல்ல"

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 10:22 முப

Balzac and the Little Chinese Seamstress-னு ஒரு படத்தில் இவனைப் பாத்து விழுந்ததுதானுங்க. இன்னும் எந்திரிக்கலைங்க.

படத்தோட கதை கேக்கறீங்களா?

சீனப்புரட்சிபத்தியெல்லாம் நா உங்களுக்குச் சொல்லத் தேவலைங்க. படிச்ச குடும்பங்களைச் சேர்ந்த நகரத்துப் பசங்களைக் கிராமப்புறங்களுக்கு அனுப்பினதெல்லாம் உங்களுக்குத் தெரியுந்தானே. கிராமப்புறங்களில அவங்க என்ன செய்வாங்கன்னு நினைக்கிறீங்க? வேலை, வேலை, வேலைதானுங்க. இடுப்பொடியற அளவு வேலைங்க. இப்படி இருக்கிறப்பதான் எழுபதுகளில அனுப்புன நகரத்துப் பசங்க கும்பலில ரெண்டு பசங்க இருந்தானுங்க. அவங்களில ஒருத்தனா நடிச்சவருதான் நம்ம Ye Liu.

வாய்ப்புக்கிடைச்சா படத்தைப் பாருங்கோ. அருமையான றொமாண்டிக் படங்க.

ஏம்ப்பா ஞானம்!

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 8:31 முப

திண்ணைல இவரு சொல்றதப் பாருங்க. என்னமூ அர்த்தமா சொல்றாரு. நமக்குத்தான் புரியிதில்லிங்கோ.

————————

கற்பதை விட்டொழி

புதுவை ஞானம்

கற்பதை விட்டொழி -உந்தன்

தொல்லைகளுக்கு முடிவு கட்டு.

ஆம் என்பதற்கும்

இல்லை என்பதற்கும்

வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ?

நல்லது என்பதற்கும்

கெட்டது என்பதற்கும்

வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ?

மற்றவர்கள் அஞ்சுவதைக் கண்டு

நானும் அஞ்ச வேண்டுமா ?

இது என்ன முட்டள் தனம் ?

எருதைப் பலியிட்டு விருந்தைச் சுவைக்கின்றனர் சிலர்

பூங்காவுக்குச் செல்கின்றனர் வசந்தத்தில் சிலர்

சிகரங்களில் ஏறிச் சாதிக்கின்றனர் சிலர்

எங்கிருக்கிறேன் என்பதே புரியாமல்

தடுமாறுகிறேன் நான் மட்டும்.

இன்னும் சிரிக்கக் கற்றுக் கொள்ளாத

அப்போது தான் பிறந்த பச்சிளம் குழந்தை போல

எங்கும் போவதற்கின்றி தவித்துத்

தடுமாறுகிறேன் நான்.

தேவைக்கு மேலேயே இருக்கிறது மற்றவர்க்கு

எனக்கு என்று எதுவுமே இல்லை.

நான் ஒரு முட்டாள் ஆம், குழம்பிப் போனவன்.

தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கிறார்கள் மற்றவர்கள்

நான் மட்டும் தான் இருட்டில் தடுமாறுகிறேன்

கூர்மையாகவும் புத்தியாகவும் மற்றவர்கள்

நான் மட்டும் தான் தத்தளிக்கிறேன் கடலலை போல்

போக்கற்றும் ஓய்வற்றும்.

சுறுசுறுப்பாய் மற்றவர்கள்

நோக்கமற்றும் மன இறுக்கத்தோடும்

வித்தியாசமானவன் நான்

இயற்கை அன்னையால்

சீராட்டப் படுபவன்.

மே 1, 2006

testing….

Filed under: பகுக்கப்படாதது — kulavikal @ 8:37 முப

Create a free website or blog at WordPress.com.