நாந்தான் குடிமகள். குடிமகள்னா என்னாங்க. உங்களுக்கு ஒடன குடிக்கிற பொம்பள அப்டீன்னு நெனப்பீங்க. அத விடுங்க. நான் இந்நாட்டின் குடிமகன்னு ஆம்பளைங்க சொல்லுவாங்க. அதுதாங்க, நானும் என்னை குடிமகள்னு கூப்பிட்டுக்கிறேன். அவங்கல்லாம் குடிமகன்னா, நான் குடிமகள் இல்லையா? இது தாங்க நம்ம பேரு சரித்திரம்.
ஆஆஆ. குடி. அதெல்லாம் ஒரு பாட்டுக்கு இருக்கட்டுங்க. ரெண்டையும் போட்டு ஏங் குழப்பிக்கணும்?
இதையெல்லாம் நான் சொல்லலைன்னா யாருங்க சொல்லுவாங்க?
நம் கையே நமக்குதவி!
ஏற்கனவே லூசும் oops வியற்குழவியும் அநாமிகாவும் குசும்புக்குழவியும் வாந்தியெடுத்துப்புட்டாங்க. என்னமோ போங்க. ஒரே கொழப்பமாப்போச்சு. தப்பா நெனக்காதீங்க. அவங்க அறிமுகங்களைக் கொட்டிவிட்டாங்க. இப்ப நான் குதிக்கிறேன். இனி, தொடர்ந்து குடிமகளை இங்கே பார்க்கலாம்.
வர்ரேங்க. see ya!

என்ன புள்ள நீ தனிய இருந்து கள்ளுக் குடிக்கிறியா?
என்ன லூசுன்னு சொல்லிட்ட
சரி போகுது
வா குடிப்பம்
Comment by வியர்க் குளவி — ஜூன் 30, 2006 @ 8:35 மு.பகல்