நானு ஒரு சாதாரண பொம்பளைங்க. எல்லாரும்போல கொஞ்சம் லூசுங்க… அப்படிச் சொல்லாதிங்க, எல்லாரும் ஒரு வகையில லூசுங்க தானுங்க. சீச்சி, முத்தலைங்க. நீங்க உண்டுபண்ணினாத்தான்…
அப்பப்ப வந்து தலைகாட்டீட்டுப் போவனுங்க, மூடு அவுட்டு ஆவற டைம்களில.. நீங்களும் வந்து…
இல்லாட்டியும் பரவாயில்லிங்க, நானே ஏதாச்சும்…
வரட்டுங்களா. என்ற கூட்டாளிங்க அல்லாரும் (அல்லாரும் பொம்பளைங்க இல்லிங்) வக்கே்ஷனில போயிட்டாங்க. இன்னா பண்ண, கையில நயா பைசா இல்லீங்க. அண்ணன்தம்பீங்கன்னு இருந்தாலே பிரச்சனைதாங்க, புரு்ஷன் பொண்டாட்டின்னா சொல்லணுமா? என்னா என் லாஜிக்கு!! வலைப்பதிவுக்கு இம்புட்டு போதுங்க.
சரீங்க உண்மையா வரேங்க. எல்லாரும் டேக்கு கியாரு.
வணக்கமுங்கோ.
அப்பாலிக்கா ஒரு விசயம்.
இடுகைகளுக்குக் கீழ சிட்டுவேசன் ஸாங்கு போடுவேனுங்கோ, என் மூடுகோசரம்.. கண்டுக்காதிங்க.
ஆங்..அதப்பற்றி சின்னக் குறிப்புங்க…
நானா இயற்றி நானே எழுதுவேனுங்கோ, பிறப்பில இருந்து வந்த திறமையுங்கோ, கண்ணு வைக்காதிங்கோ(ஓ……………….. ), பிடிச்சா பாடிக்குங்கோ. சுட்டுராதீங்கோ¡, காப்பி/டீ ரைட்ஸ் எல்லாம் என்னதுங்கோ.
இப்பிடித்தானுங்கோ. சும்மா சொல்லக்கூடாது. ஆனா எனக்கு நிறைய திறமையுங்கோ!
பாட மாட்டேன்
ஆட மாட்டேன்
ஆனால எழுதினேன்னா கவிதையா கொட்டுமுங்கோ. எல்லாம் சொந்தச் சரக்கு. எரிச்சல்ல வேகாதிங்கோ. நம்ம பொண்ணுதானேன்னு ஸ்போர்டிவ்வா எடுத்துக்கிட்டு ஜாலினோ ஜிம் கானா-ன்னு இருங்கோ.
சரீங்களா? கோபமில்லியே? மனஸ்தாபம்??? நமக்க்க்க்க்குள்ள என்னங்க? இல்ல???
நான் அடிக்கடி சொல்லுறதுண்டு, வாழ்க்¨யே ஒரு நாடக மேடை.
புரியுதுங்களா? ஆமா ஒரே ஸ்டெடியில நிக்கோணுமுங்கோ.
சரீங்களா?
இத மாச்சு மாதம் ஆரம்பிச்சேங்க.. ஆனா இப்பத்தான் பதினாலு மாசங்கழிச்சு மே-ல முடியுது.
தரமா வரணுங்கோ, அதான் முக்கியம். அந்த முயச்சியில பிறந்ததுங்க இந்த ‘அறிமுகம்.’
அப்பறம் .. முக்கிய மாட்டர கேக்க மறந்திட்டனே..
நானு எப்பிடிங்க இருக்கேன்? குட்டிப் பையன் கார்த்திக்கு ரேஞ்சுக்கு இல்லாட்டிலும் ரொம்ப புஷ்டியா இருப்பேனுங்க.. பிராப்புளமுங்கோ.
ச்சிஸ்டர்ஸ்! நான் ஒல்லியாகணுங்கோ… எனக்கு தனிமடலில டயட் பண்ண டிப்ஸு அனுப்புங்கோ..
அனுப்பூவீகளா?
நம்மெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணில்லியா?!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சொந்தக் கருத்துப் பாடல்:
சிந்திச்சா சிரிப்பு வரும்
சிலவேளை அழுகை வரும்